சேத்பட் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2023-11-03 02:49 GMT

ஆட்சியர் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.கரைபூண்டி ஊராட்சியில் 6 ஏக்கர் பரப்பளவில் 82 நரிகுறவர் இன மக்களுக்கு வீட்டுமனை வழங்க உள்ள இடத்தினை பார்வையிட்டார். மேலும் மண்டகொளத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் கரிகாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்பில் சிறுபாலம் கட்டப்பட்டு வரும் பணிகள், நம்பேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி மைய கட்டடம் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் அமையும் இடத்தினை ஆய்வு செய்தார். மேலும் நம்பேடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் 100 நாள் வேலையினை பார்வையிட்டு கள பணிகள் குறித்து கேட்டறிந்தார். தற்போது நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளும் விரைந்து முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சி) ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் கோ.வேந்தன் (ஆரணி) சேத்பட் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், இந்திராணி, வட்டாட்சியர்கள் வெங்கடேசன்,(போளுர்) வெங்கடேசன், (சேத்பட்), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News