வளர்ச்சி திட்டப்பணிகள் - அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்

Update: 2023-12-17 06:28 GMT

ஆய்வு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசுவப்பட்டி, எக்கட்டாம்பாளையம், புஞ்சைப்பாலத்தொழுவு ஆகிய 10 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும் , சிப்காட் தொழிற்பேட்டை கழிவுகள் அகற்றுதல் தொடர்பான பணிகள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தொடர்பான அறிவிப்புகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கையும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரிசெய்ய கூடிய கோரிக்கைகளுக்கு உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

Similar News