ரூ.2.40 கோடியில் வளர்ச்சி பணி: திருமழிசை கூட்டத்தில் தீர்மானம்

ரூ.2.40 கோடியில் வளர்ச்சி பணி மேற்கொள்ள திருமழிசை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-06-15 13:25 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில், நேற்று நடந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகிக்க, பேரூராட்சி தி.மு.க., துணை தலைவரும், பொறுப்பு தலைவருமான மகாதேவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்,

ஆண் 20 பேர், பெண் 15 பேர் என, மொத்தம் 35 பேர் இறப்பு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின், வரவு - செலவு தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, அனைத்து வார்டுகளிலும் 2 கோடியே 40 லட்சத்து 36 ஆயிரத்து 991 ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக்,

தார், சிமென்ட் சாலை சீரமைத்தல், கால்வாய் கட்டுதல், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்மோட்டர் உட்பட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பேரூராட்சி வணிக வளாகத்தில், 1 முதல் 12 கடைகள் மற்றும் உடையவர் கோவில், பேருந்து நிலையத்தில் நவீன சுகாதார வளாகம், காவல்சேரி செல்லும் சாலையில் சமுதாய கூடம் மற்றும் மீன் ஏலம், பனை மர மகசூல் போன்றவற்றிற்கு ஏலம் விடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் விபத்தில் உயிரிழந்த பேரூராட்சி தலைவர் வடிவேல் உருவ படத்தை, திருமழிசை பேரூராட்சி துணை தலைவர் மகாதேவன் திறந்து வைத்து,

அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், 2.24 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கியை வசூலிக்க, 'நோட்டீஸ்' வழங்கும் பணி நடந்து வருவதாகவும், பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.

Tags:    

Similar News