வளர்ச்சிப் பணிகள்: கலெக்டர் ஆய்வு!
வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு!l செய்தார்.
திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் அரசின் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார். லெம்பலக்குடி ஊராட்சி செட்டியாபட்டியில் அங்கன்வாடி கட்டடம் கட்டுமான பணியை பார்வையிட்ட கலெக்டர், கட்டுமான பணியை விரைவாக முடிக்குமாறும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்படுத்த சாய்தளம் அமைக்கவும் உத்தரவிட்டார்
. பின்னர் திருமயம் பாப்பாவயலில் ரூ.8 லட்சத்தில் கட் டப்படும் மயான கரை, சிமெண்ட் சாலை, ஊணையூர் ஊராட்சி கீழக்குளத்துப்பட்டிகாரைக்குடி சாலைப்பணி ஆகியவற்றை பார்வையிட்டார். காட்டுபாவாபள்ளிவா சல் அரசு பள்ளியில் கட்டப்படும் இரண்டு வகுப்பறை கட்டடம், பழந்தினாபட்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளையும் பார்வையிட்டார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள உதவி செயற் பொறியாளருக்கு உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதாப்பிரியா, செயற்பொறியாளர் 10 பாலகிருஷ்ணன், ஆணையர் சங்கர், பிடிஓ நளினி மற் றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.