தை பிரதோஷம்: சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்

3 மாதத்திற்கு பின்பு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளதால் தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சாமி தரிசம் செய்தனர்.

Update: 2024-01-24 02:42 GMT

தை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரதித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம்,பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்கள் மட்டும் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் மழையின் காரணமாக கடந்த 3 மாதங்களாக பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை என்பது விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்தால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு மலையேறி சென்று சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News