சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் மொட்டையடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செய்தனர்.;

Update: 2024-04-13 06:42 GMT

 பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பழமையும், புராதான வரலாறும் கொண்ட சிறுவாச்சூர் மதுரா காளியம்மன் ஆலயத்தில், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் கோவில் திறக்கப்பட்டு சாமி தரிசனம் நடைபெறும், இந்நிலையில் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அளவில் மதுரகாளியம்மனுக்கு திருமஞ்சனம் மஞ்சள், சந்தனம், பால், தயிர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துக்கு பிறகு மகா தீபாரதனை நடைபெற்றது,

Advertisement

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மாவிடித்து படையில் இட்டும், மொட்டை அடித்து காது குத்தியும், மேலும் அங்க பிரதட்சணம் செய்தும், தங்கள் நேர்தி கடனை நிறைவேற்றி வழிபாடு செய்தனர் . இந்த மதுர காளியம்மன் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்கி வருவதால், பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு நேர்த்தி கடன் செலுத்தி, சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர் . கோவிலில் பக்தர்கள் வழிபட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News