திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-01-02 02:02 GMT
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ கோயில்களில் ஒன்று. ஆண்டாள் ,ரெங்க மன்னார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த பெருமைக்குரிய தலமாகும். இங்கு மார்கழி மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் கடந்த 13 ஆம் தேதி பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி பலவிதமான அலங்காரங்களில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆழ்வார்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிலையில் இன்றுடன் இராபத்து உற்சவம் பத்தாம் நாள் . இதனைத் தொடர்ந்து வருகின்ற எட்டாம் தேதி எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலே முதலே கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.