வடமாநில வியாபாரிகளால் பக்தர்கள் அவதி

பழநி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதையில் முகாமிட்டுள்ள வடமாநில வியாபாரிகளால் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-12-28 04:42 GMT

பழநி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதையில் முகாமிட்டுள்ள வடமாநில வியாபாரிகளால் அவதிப்படுகின்றனர். 

இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார், கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் இருந்து வந்த 300க்கும் மேற்பட்டோர் பழநி புறநகரில் டென்ட் அமைத்து தங்கி மத்தளம் மற்றும் பிளாஸ் ஆப் பாரீஸ் வகை மாவினால் செய்யப்பட்ட பொம்மைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். வடமாநில வியாபாரிகள் சாலைகளின் நடுவில் நின்று கொண்டு, பக்தர்களை பெரும் தொந்தரவு செய்கின்றனர். பக்தர்கள் கூட்டத்தைவிட வடமாநில வியாபாரிகளின் கூட்டமே அடிவார பகுதியில் அதிகம் உள்ளது. இதன்காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கையால் ஏழை உள்ளூர் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
Tags:    

Similar News