பங்குனி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்த பக்தர்கள்

பரமக்குடி, ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-03-27 12:12 GMT

 பரமக்குடி, ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோவிலில் பங்குனி திருவிழா பால்குட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அதிகாலை 4 மணி முதல் 12 மணி வரை 15,000 ற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

வைகை ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட மண்டகபடியில் இருந்து துவங்கிய பால்குடம் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, பக்தர்கள் பால் குடத்தை சுமந்தபடி வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். இவ்விழாவை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை,தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் மலேசியா சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்து பால்குட நிகழ்ச்சியை கண்டு வருகின்றனர்.பால்குட‌ பெருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்..

Tags:    

Similar News