கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-25 06:25 GMT
வெயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள திரளான பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் 5 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.