அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

திருக்குளம் அருகே வனதுர்க்கையம்மன் கோவில் நவராத்திரி விழாவில் பக்தர்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

Update: 2023-10-24 04:18 GMT

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி திருக்குளம் அருகே வனதுர்க்கையம்மன் கோவிலில், 53 ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த, 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மேலும் கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து, மாலை நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மூலவர் அம்மனுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை நடத்தி வழிப்பட்டனர். உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு பக்தர்கள் அலகு குத்தி ஆகாயத்தில் தொங்கியவாறு உற்சவர் அம்மனுக்கு எலுமிச்சை மாலை ரோஜா மாலை ஆகாயத்தில் தொங்கியபடி தீபாவர்த்தனை காட்டி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 24ம் தேதி தீமிதி விழாவுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News