பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

சங்ககிரி அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.;

Update: 2024-01-27 03:05 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி வெள்ளூற்று பெருமாள் கோவிலில் தங்கி வழிபாடு செய்து பழனிக்கு காவடி எடுத்து பாத யாத்திரையாக எடப்பாடி வெள்ளாண்டிவலசு ஆதிபரம்பரை பக்தர்கள் அரோரா கோஷத்துடன் நடை பயனத்தை தொடங்கினார்... எடப்பாடி வெள்ளாண்டிவலசு ஆதிபரம்பரை வன்னியர் காவடிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறுவர் பெண்கள் இளைஞர்கள் என 1000க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் விரதம் இருந்து சங்ககிரி அருகேயுள்ள அரசிராமணி வெள்ளூற்று பெருமாள் கோவிலில் இரவு முழுவதும் தங்கி வழிபாடு செய்து பழனிக்கு நடை பயனத்தை தொடங்குவது வழக்கமாகும்,

Advertisement

இந்நிலையில் இந்த ஆண்டு எடப்பாடி வெள்ளாண்டிவலசு, நடுத்தெரு,கவுண்டம்பட்டி,நைனாம்பட்டி,தாவாந்தெரு, ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே வீதிகளில் செயற்கையாக பழனி மலை போல் மண் கால்களால் வடிவமைத்து முருகன் சுவமிக்கு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இதனையடுத்து நேற்று இரவு எடப்பாடி வழியாக அரசிராமணி வெள்ளூற்று பெருமாள் கோவிலை வந்தடைந்தனர், பின்னர் இரவு முழுவதும் கோவிலில் தங்கி வெள்ளூற்று பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அனைத்து காவடிகளும் ஒரு இடத்தில் இருந்து அரோரா கோஷம் எழுப்பி பாத யாத்திரை செல்லும் பயணத்தை தொடங்கினார்.

Tags:    

Similar News