ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருவிழா : கூழ் ஊற்றி பக்தர்கள் வழிபாடு..
ஆம்பூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில் கூழ் ஊற்றியும், கிரேன் இயந்திரத்தில் அலகு குத்தியும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில் கூழ் ஊற்றியும், கிரேன் இயந்திரத்தில் அலகு குத்தியும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் வாரம் ஸ்ரீ மாரியம்மன், மற்றும் அம்மன் அம்மன் கோவில் திருவிழா நடைப்பெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டும் வைகாசி மாதம் முதல் வாரத்தில் ஸ்ரீ மாரியம்மனுக்கு ஊர் பொதுமக்கள், கூழ் வார்த்தும், மாவிளக்கு படைத்தும், அம்மனை வழிப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மாரிஅம்மன் திருவீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்தார்.. இதனை தொடர்ந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு ஊர் பொதுமக்கள் பூங்கரகம் எடுத்தும், கிரேன் இயந்திரம் மூலம் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மூன்று நாட்கள் நடைப்பெறும் இந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்...