சோளீஸ்வரர் கோவிலில் தனுர்மாத சிறப்பு பூஜை:
மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோவிலில் தனுர்மாத பூஜை மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.;
By : King 24x7 Website
Update: 2024-01-02 16:51 GMT
மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோவிலில் தனுர்மாத பூஜை மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுரை ஸ்ரீசோழீஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் ஆங்கில புத்தாண்டு மற்றும் தனுர்மாதத்தை முன்னிட்டு, மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி, சிறப்பு பூஜைகள் நடந்தது. அதேபோல், திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். பெண்கள் தீபமிட்டு வழிபட்டனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.