தரம் தூக்கிப்பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம்!
தரம் தூக்கிப்பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
Update: 2024-04-11 04:30 GMT
இலுப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற தரம்தூக்கி பிடாரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மண்டகப்படிதாரர்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு அம்மன் வீதியுலா நடந்து வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளிய தும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். 5.30 மணிக்கு தொடங்கிய தேரோட் டம் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து 6.15 மணிக்கு நிலையை அடைந்தது. தேர்த்திருவிழாவை யொட்டி ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந் தன. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.