அக்காவை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை
சொத்து பிரச்சனையில் அக்காவை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லை சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் அரசு பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய தம்பி காமராஜ் மீன் பிடிக்கும் தொழிலாளி. இந்த நிலையில் ராஜம்மாளுக்கும், காமராஜுக்கும் நிலம் தொடர்பாக சொத்து தகராறு இருந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி காமராஜ். தனது அக்கா ராஜம்மாளை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
ராஜம்மாளை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்குகெ கொண்டு சென்றனர். அங்கு ராஜம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஒகேனக்கல் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் காமராஜ் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனால் காமராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.