வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

தருமபுரி, பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இஆப, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-15 01:38 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், சோகத்தூர் ஊராட்சி RD நகர் சிறைச்சாலை அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-25 ஆம் ஆண்டின் கீழ் ரூ.18.210 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணிகளையும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பருவதனஅள்ளி ஊராட்சி குறுந்தொப்பு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-25 ஆம் ஆண்டின் கீழ் ரூ.11.92 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தினையும், அஞ்சேஹள்ளி ஊராட்சி. இரங்காபுரம் கிராமத்தில் மரம் நடும் பணிகளை துவக்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஏரியூர் பேருந்து நிலையத்தில் தூய்மை பணிகளையும், அடிப்படை வசதிகளையும், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏமனூர் ஊராட்சியில் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு அமைக்க உள்ள இடத்தையும், ஏரியூரியில் ரூ.59.00 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார சுகாதார மைய கட்டிட கட்டுமான பணிகளையும். தேல்கல்காடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-25 ஆம் ஆண்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குளத்தினையும் என மொத்தம் ரூ.1 கோடியே 8 இலட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திட வேண்டுமென ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்களிடம் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி. சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் சுகுமார். தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா.சத்தியா, கே.ரங்கநாதன், தருமபுரி உதவிப் பொறியாளர் சி.துரைசாமி. பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், உதவி பொறியாளர் இளவேணி, ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேல், விமலன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்

.

Tags:    

Similar News