தர்மபுரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Update: 2024-02-15 07:16 GMT

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனைப்படி தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் தடங்கம் சுப்பிரமணி ,பி.பழனியப்பன்  தலைமையில் நடக்கிறது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் செல்வராஜ், மனோகரன் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். கூட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன் னிட்டு நலஉதவிகள் வழ ங்குவது, நாடாளுமன்ற தேர்தல்-2024. உரிமைகளை மீட்க தலைவரின் குரல் மாபெரும் பொதுக் கூட்டம் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் இந்நாள், முன் னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News