தர்மபுரி தான் எனக்கு தாய் வீடு - சௌமியா அன்புமணி

பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தர்மபுரி தான் எனக்கு தாய் வீடு, நீங்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள், உங்கள் வீட்டுப் பெண்ணை நீங்கள் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2024-04-16 03:51 GMT

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி,பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாடி பகுதியில் தேசியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி நேற்று இரவு பொதுமக்களை சந்தித்து வாக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது தர்மபுரி தான் எனக்கு தாய் வீடு நீங்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள், உங்கள் வீட்டுப் பெண்ணை நீங்கள் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நமது மாவட்டத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரவும் தவறாமல் மாம்பழம் சென்று வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்தார்.இந்த நிகழ்ச்சிகள் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் பாமக கௌரவத்தில் ஜிகே மணி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News