லாட்டரி சீட்டு விற்பனை செய்த நான்கு பேர் கைது - போலீசார் விசாரணை
தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்ததால் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்;
Update: 2024-02-26 18:31 GMT
லாட்டரி விற்பனை செய்தவர்கள் கைது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பென்னாகரம் நகர பகுதியில் தடையை மீறி லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பென்னாகரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் ரோந்து பணி மேற்கொண்ட காவலர்கள் பென்னாகரம் நகர பகுதி பேருந்து நிலையம் பகுதியில் அரசின் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர், முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ,சஞ்சீவன், செக்குமேடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 செட் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர் இது குறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.