தர்மபுரி மாணவன் மாநில அளவில் இறகு பந்து போட்டியில் முதலிடம்

தர்மபுரி குண்டலப்பட்டியில் தனியார் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ஆர் கே லட்சுமணன் இறகு பந்து போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2024-02-09 08:59 GMT

2023- 2024 ஆம் கல்வியாண்டு குடியரசு தின விழா 14 வயதுக்குட்பட்டவருக்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் தர்மபுரி குண்டலப்பட்டியில் அமைந்துள்ள தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ஆர் கே லட்சுமணன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையினரால் ஆண்டு தோறும் நடத்தப்படும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இறகு பந்து போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவர் ஆர் கே லக்ஷ்மணனுக்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களும் பள்ளியின் தாளாளர் அருட்திரு அருள்ராஜ் அவர்களும் பொருளாளர் தந்தை சூசைராஜ் அவர்களும் பள்ளி முதல்வர் செங்கோல் பேசில் அவர்களும் வெற்றி பெற்ற மாணவரையும் பயிற்சி அளித்த விளையாட்டு துறை ஆசிரியர் அருண்பிரேம்குமார் அவர்களையும் பாராட்டினார் வெற்றி பெற்ற மாணவரின் பெற்றோர் தங்கள் மகனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகத்திற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News