மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் அதிகாரிகள் வரவில்லை என உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-01-21 10:58 GMT
தர்ணாவில் ஈடுபட்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்தக் கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் 11 உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் சமீப காலமாக அதிகாரிகள் யாரும் வருவதில்லை. இதனை கண்டித்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன் ட் தாஸ் தலைமையில் கலெக்டர் அலுவலக வாசலில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் அதிகாரிகள் முறையாக வந்தனர். உறுப்பினர்களின் கேள்விக்கு உரிய பதில் கிடைத்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அதிகாரிகள் கூட்டத்திற்கும் முறையாக வருவதில்லை. இது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம். இதேபோல மாவட்ட கவுன்சிலர் கோரிக்கைகள் அனைத்து நிலுவையில் உள்ளது. எனவே இனிவரும் கூட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகளும் முறையாக கலந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்தால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை முடிவு செய்வோம் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News