இலவச வீட்டுமனை கேட்டு தர்ணா

குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இலவச வீட்டுமனை கேட்டு தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2023-12-22 03:49 GMT

தர்ணா 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தாலுக்கா அலுவலக வாசலில் இலவச வீட்டுமனை கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். இவர்கள் தாசில்தார் சண்முகவேலிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது :  குமாரபாளையம் தாலுக்காவில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருப்பதற்கு வீடும், மனையும் இல்லாமல் புறம்போக்கு இடங்களிலிலும், வாடகை வீடுகளிலும் கூட்டு குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா  கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல முறை வட்டாச்சியர் வசம் மனு கொடுத்து உள்ளோம். கிராம சபா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை. வீட்டுமனை நிலம் கேட்டு விண்ணபித்த இந்த மக்களுக்கு மனை  இடமோ, பட்டாவோ வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News