பாலசமுத்திரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
பால சமுத்திரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-04 10:39 GMT
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அவர்கள் குடியிருக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஓராண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக பள்ளி மாணவர்களுடன் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்