ஆத்தூர் : நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்

ஆத்தூர் அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் பரபரப்பு.

Update: 2024-03-18 08:29 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டிக்காரன் தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் துலுக்கனூர் ஏரி பகுதியில் கால்நடைகளை மேச்சலுக்காக கொண்டு சென்று போது மது போதையில் இருந்த இளைஞர்கள் மூன்று பேர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பெண்னை தாக்கியதால் கையில் காயத்துடன் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அவர்களை கைது செய்யக்கோரி ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் 50பக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல் நிலைய நுழைவாயில் பகுதியில் தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.
Tags:    

Similar News