இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியரகம் முன்பு தர்ணா போராட்டம்

தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்

Update: 2023-12-12 05:01 GMT

எம்ஜிஆர் நகர் மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியரகம் முன்பு தர்ணா போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாததால் வாடகை வீட்டிலும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர்.

தங்களது வாழ்வாதாரத்திற்காக இலவச வீட்டு மனை வேண்டும் என்று தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் காலியாக அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டகை அமைத்துள்ளனர்.

இதனையறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டிசம்பர் 11 ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆட்சியர் நுழைவாயில் முன்பு முற்றுகையிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆட்சியரகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் முக்கிய ஒரு சிலர் மட்டும் சென்று மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து அங்கு வந்த பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் பொதுமக்களிடம் தகுதியானவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுமனை வழங்கப்படும், முறையற்ற வகையில் வீட்டுமனை பெற யாரும் முயற்சிக்க கூடாது என்றும் தகுதியானவர்கள் மனு கொடுத்தால் அவர்கள் மனு மீது பரிசீலனை செய்து ஆட்சியரிடம் அனுமதி பெற்று வீட்டுமனை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார், இதனை தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர்.

Tags:    

Similar News