திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு போலி பட்டாவை ரத்து செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-19 12:33 GMT

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னவன் என்பவரின் மனைவி சாலியம்மாள் வயது 80 இவருக்கு சொந்தமாக உடையாமுத்தூர் ஊராட்சியில் 5.30 விவசாய நிலம் ஏக்கர் உள்ளது.

இந்த நிலையில் உடையாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 13 நபர்கள் போலியாக பட்டா தயார் செய்து தனது நிலத்தை அபகரித்து விட்டதாகவும் போலி பட்டாவை ரத்து செய்து எனது நிலத்தை மீட்டு தரக் கோரி இன்று திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு சாலியம்மாள் மற்றும் அவரது வாரிசுகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலிசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது..

Tags:    

Similar News