கொல்லங்கோடு அருகே வாலிபர் ஆற்றில் தவறி விழுந்து சாவு

கொல்லங்கோடு அருகே வள்ளத்திலிருந்து வாலிபர் ஆற்றில் தவறி விழுந்து பலியாகினர்.

Update: 2024-01-05 12:24 GMT
இறந்த பிரதீஷ்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன் துறை பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் (31).  இதே ஊரை சேர்ந்தவர் சுஜின்.

இருவரும் நேற்று மாலை 3 மணி அளவில் இரயுமன்துறை,  தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். பிரதிஷ் படகை இயக்கிக் கொண்டிருந்தார்.      

 படகு கடலின் முகத்துவார பகுதியில்  சென்றபோது, திடீரென நிலை தடுமாறியது. அப்போது பிரதீஷ் ஷ் படகில் இருந்த தவறி ஆற்றில் விழுந்தார். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பிரதீ ஷை  காப்பாற்ற சுஜின் முயன்றார். ஆனால் அதற்குள் பிரதீஷ் தண்ணீரில் மூழ்கினார்.    

    அந்த நேரம் ஆற்றில் சங்கு குளித்து கொண்டு இருந்த வர்கள் சம்பவத்தை பார்த்து, ஆற்றில் குதித்து பிரதீஷை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக  தூத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற போது, பிரதீஷ் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.      

இது தொடர்பாக புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News