திண்டுக்கல்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் செலுத்தும்படி தெரிவிப்போரிடம் உஷாராக இருக்க வேண்டுமென திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Update: 2024-05-17 10:45 GMT

சைபர் கிரைம்

ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, திண்டுக்கல் சைபர் க்ரைம் போலீசார் கூறியதாவது' "ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி, உங்களிடம் முன்பணம் செலுத்த யாராவது தொடர்பு கொண்டால், அந்த அழைப்பை துண்டித்து விடவும்.அடையாளம் தெரியாதவர்,உங்களை தொடர்பு கொண்டு வங்கி ஏ.டி.எம்., கார்டு எண்,ரகசிய எண்,வங்கி கணக்கு எண்,பான் கார்டு போன்ற பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை கேட்டால்,அந்த அழைப்பையும் துண்டிக்கவும். மொபைல் தொலைந்துவிட்டால், அதன் எண்ணை, 'பிளாக்' செய்யவும். இல்லையெனில், உங்கள் எண் தவறாக பயன்படுத்தக்கூடும். ஆன்லைன் மோசடி குறித்து, www.cybercrime.gov.in என்ற இணைய தள முகவரியில் புகார் அளிக்கலாம்" என தெரிவித்தனர்.
Tags:    

Similar News