மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வுபேரணியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.

Update: 2023-12-11 09:03 GMT

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வுபேரணியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் பதிவு 2023 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு மாவட்ட முழுவதும் நடைபெற்று வருகிறது. 

இது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு 2023 என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் பல்லடம் சாலையில் நிறைவடைந்தது.

Tags:    

Similar News