முதல்வர் நடத்திய விழாவில் மாற்றுத்திறனாளி உளைச்சல்

மயிலாடுதுறையில் தாலிக்கு தங்கம் வாங்க வந்த மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்ட நிலை

Update: 2024-03-04 17:28 GMT

மாற்றுத்திறனாளி உளைச்சல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் மயிலாடுதுறையைச் சார்ந்த இரண்டு கைகள் மற்றும் கால்கள் ஊனமடைந்த நடமாட முடியாத மாற்றுத்திறனாளி பெண்மணி ஜெயந்தி என்பவருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கம் வழங்க பயனாளி பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர்களை வரச் சொல்லிவிட்டு முதலமைச்சர் கையால் உங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் திருப்பி அனுப்பிய நிலையில் இன்று முதலமைச்சருக்கான நிகழ்ச்சி பற்றிய எந்தவித தகவலும் மாற்றுத்திறனாளி ஜெயந்திக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் சக்கர வாகனம் வாங்கும் வசதி இல்லாத ஜெயந்தியை அவரது கணவர் சிலம்பரசன் சைக்கிளில் பின்புறம் வைத்து கஷ்டப்பட்டு விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தார். தாமதமாக வந்ததால் உள்ளே விடாமல் அலைக்கழித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விழா முடிந்த பின்பு வாசலில் நின்று தங்கள் தரப்பு நியாயத்தை ஜெயந்தி தம்பதியினர் கேட்டனர் அவர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றனர். நடமாட முடியாத தன்னை வேகாத வெயிலில் அதி மிகவும் கஷ்டப்படுத்துவதாக ஜெயந்தி வேதனையுடன் தெரிவித்தார். தொடர்ந்து அதிகாரிகள் அவரை உள்ளே அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News