நொய்யல் ஆற்றில் மழை நீருடன் சாயக்கழிவு

நொய்யல் ஆற்றில் மழை நீருடன் சாயக்கழிவு வெளியேறுவதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2024-05-24 16:56 GMT

நொய்யல் ஆறு

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் உருவாகும் நொய்யல் ஆறு,திருப்பூர், கரூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. பெரும்பாலன நாட்களில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வருவதில்லை.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதேசமயம் திருப்பூரில் செயல்படும் சாயப்பட்டறைகளில் வெளியேறும் சாயக்கழிவுகளை சுத்திகரிக்கும் செலவை மிச்சப்படுத்துவதற்காக சாய கழிவு நீரை அப்படியே நொய்யல் ஆற்றில் திறந்து விடுகின்றனர் சாயப்பட்டறை உரிமையாளர்கள்.

ஒவ்வொரு முறையும் விவசாயிகள் இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது, தூய்மையாக வரும் மழை நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என நினைத்திருந்த வேளையில், சாயக்கழிவு நீரை கலந்து விட்டதால் விவசாயிகள் நீரை பயன்படுத்த முடியாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விவசாயிகள் நொய்யல் ஆறு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகளும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News