பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை 

பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு குமரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-05-18 07:48 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட களியக்காவிளையில் தினசரி காய்கறி மற்றும் மீன் சந்தை செயல்படுகிறது. இந்த சந்தைக்கு வரும் வியாபாரிகளின் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிப்பதில் ஒப்பந்ததாரருக்கும் வியாபாரிகளுக்கு இடையே பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.      

இந்த நிலையில் நுழைவாயில் வசூலிப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்த கட்டணங்களை விட கூடுதலாக ஒப்பந்ததாரர்கள் வசூலித்ததாகவும், பேரூராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் வியாபாரிகள் தரப்பில் புகார் இருந்தன. இது தொடர்பாக மதுரை கோர்ட்டில் வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டன.        வழக்கின் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சந்தை வசூல் உரிமங்களுக்கான பொது ஏலங்களில் நடைபெற்ற குறைபாடுகள் தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தியதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.        

அதன் அடிப்படையில் பேரூராட்சியின் முன்னாள் செயலாளர். இயேசு பாலன் என்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதாவது சம்பந்தப்பட்ட முன்னாள் அதிகாரி மீது தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு வீதி 17(பி) படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.       இதுபோக களியக்காவிளை பேரூராட்சியின் அப்போதைய தனி அலுவலர் கண்ணன், முன்னாள் செயலாளர். சத்திய தாஸ் மற்றும் தற்போதைய செயல் அலுவலர் ரமாதேவி அவர்கள் மீது கண்டறியப்பட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவர்களிடம் தனித்தனியாக எழுத்து மூலமாக விளக்கம் பெற்றிடவும் அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News