நில பிரச்சனையில் உறவினர்களிடையே தகராறு- 3 பேர் மீது வழக்கு பதிவு.

Update: 2023-11-19 03:50 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், உப்பு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் என்பவரின் மகன் சுக்கலா (42) இவரது சகோதரர் திருப்பூர் மாவட்டம், கே.செட்டிபாளையம், பேங்க்காலனி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (42). இவர்களுக்கிடையே நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே சுக்லா நவம்பர் 16ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில், கரூர், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.எம்.புதூரில் உள்ள அவரது தந்தை வீட்டின் முன்பு அவரது மனைவி கவிதாவுடன் நின்று கொண்டு இருந்தார். இதனை அறிந்த சுரேஷ், அவரது நண்பர் முருகன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் என மூன்று பேரும் அங்கு வந்து வாய் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், ஒரு கட்டத்தில் தகராறு கைகலப்பாக மாறி, அரிவாளை காட்டி சுக்லா மற்றும் அவரது மனைவி கவிதாவை மிரட்டல் விடுத்ததோடு, துன்புறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, தாந்தோணி மலை காவல் நிலையத்தில் சுக்லா அளித்த புகார் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சுரேஷ், முருகன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் மூன்று பேரும் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News