இரு தரப்பினரிடையே தகராறு - 4 பேர் கைது
Update: 2023-12-03 05:51 GMT
விழுப்புரம் அருகே உள்ள எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி புவனேஸ்வரி (38). இவருக்கும். பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் வீட்டுமனை பிரச்சினை ஏற்பட்டு அதுசம்பந்தமான வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புவனேஸ்வரி, பிரச்சினைக்குரிய அந்த வீட்டுமனையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ராமு (52), அவரது சகோதரர்கள் ராஜாங்கம் (42), கருணாநிதி (45), ராமுவின் மனைவி தெய்வநாயகி (40), கருணாநிதியின் மனைவி அம்புஜவள்ளி (34), கண்ணதாசனின் மனைவி சுமித்ரா (27), மோகனா (22) ஆகியோர் சேர்ந்து புவனேஸ்வரி மற்றும் அவரது கணவர் ராதாகிருஷ்ணன், அவருடைய அண்ணன் ராமகிருஷ்ணன் (45), மனைவி பாப்பாத்தி (40) ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பதிலுக்கு புவனேஸ்வரி குடும்பத்தினர், ராமு குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த புவனேஸ்வரி, ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், பாப்பாத்தி மற்றும் சுமித்ரா, கருணாநிதி, பரந்தாமன், அம்புஜவள்ளி, மோகனா ஆகியோர் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுகுறித்து புவனேஸ்வரி, சுமித்ரா ஆகியோர் தனித்தனியாக வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதில் புவனேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் ராமு உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாங்கம், கருணாநிதி ஆகிய இருவ ரையும் கைது செய்தனர். அதேபோல் சுமித்ரா கொடுத்த புகாரின் பேரில் புவனேஸ்வரி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.