கடன் பெற ஜாமீன் கொடுத்தவருக்கு நெருக்கடி கொடுத்ததால் தகராறு

கடன் பெற ஜாமீன் கொடுத்தவருக்கு நெருக்கடி கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-19 09:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, சீதப்பட்டி காலனி ,நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் குருவிக்னேஷ் வயது 25. அருகில் உள்ள நேரு நகரில் வசித்து வருபவர் ரஞ்சித் குமார் வயது 32. சீதப்பட்டி காலணியில் வசித்து வருபவர் நவநீதகிருஷ்ணன் என்கிற சுபாஷ் மீது 28. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குருவிக்னேஷ் விடியல் பைனான்ஸ் நிறுவனத்திலும், பியூசியன் பைனான்ஸ் நிறுவனத்திலும் கடன் பெற்றுள்ளார்.

கடன் பெறுவதற்கு ரஞ்சித் குமாரும் சுபாஷும் ஜாமீன் அளித்துள்ளனர். கடன் பெற்ற பிறகு குருவிக்னேஷ் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடன் கொடுத்த பைனான்ஸ் நிறுவனங்கள் ஜாமீன் அளித்த ரஞ்சித் குமார் மற்றும் சுபாஷுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனிடைய நவம்பர் 13ஆம் தேதி இரவு 8:30-மணி அளவில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகம் அருகே குருவிக்னேஷ்சை சந்தித்த ரஞ்சித் குமார் மட்டும் சுபாஷ் ஆகிய இருவரும் கடன் வாங்க ஜமீன் கொடுத்த விவகாரம் குறித்து பேசும்போது, கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ரஞ்சித்குமார் சுபாஷ் ஆகிய இருவரும் குருவிக்னேஷை கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த குரு விக்னேஷ் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குரு விக்னேஷ் அளித்த புகாரில் டிசம்பர் 14ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையின் முடிவில் ரஞ்சித் குமாரை கைது செய்தனர். சுபாஷ் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

மேலும், இது தொடர்பாக கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, ரஞ்சித் குமாரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News