பிரச்சனைக்குரிய இடத்தில் தேங்காய் பறித்ததால் தகராறு - ஒருவர் கைது

பிரச்சனைக்குரிய இடத்தில் தேங்காய் பறித்ததால் தகராறு. ஒருவர் கைது.

Update: 2024-04-13 06:04 GMT
கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, காளியப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்ப கவுண்டர் மகன் முருகேசன் வயது 58. இதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில் குமார் வயது 42. இவர்கள் இருவருக்கும் அப்பகுதியில் உள்ள 95 1/2சென்ட் நிலம் தொடர்பாக, கடந்த சில வருடமாக முன் விரோதம் இருந்து வருகிறது. பிரச்சனைக்குரிய நிலத்தில் விளைந்திருந்த தேங்காய்களை ஏப்ரல் 6-ம் தேதி மதியம் 2 மணி அளவில், செந்தில்குமார் சென்று பறித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த முருகேசன் தட்டி கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த செந்தில்குமார் முருகேசனை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி உள்ளார். இது தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையின் முடிவில் தகாத செயலில் ஈடுபட்ட செந்தில்குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த வாங்கல் காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலைய பிணையில் விடிவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News