கரூர் அருகே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மிதிவண்டிகள் வழங்கல்
கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 6144 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 6144 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆணையர் வெங்கடேஷ் விளக்கம். கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொள்ள வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது 2023-24 ஆம் கல்வி ஆண்டில், கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2023 -24 ஆம் கல்வி ஆண்டில், கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர் மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் இதர வகுப்புகளை சேர்ந்த 2585 மாணவர்கள் மற்றும் 3559 மாணவிகள் என மொத்தம் 6,144- மாணவ- மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.