தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஜங்சனிலிருந்து அரசன்விளை சந்திப்புவரை நடைப்பெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரம் வழங்கினார்.;

Update: 2024-04-07 07:46 GMT
விழிப்புணர்வு பிரசுரம் வழங்கிய கலெக்டர்

குமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் குருந்தன்கோடு ஜங்சனிலிருந்து அரசன்விளை சந்திப்புவரை விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்கள். மேலும் வாக்காளர் உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரசுரங்களை கலெக்டர் பொது மக்களிடம் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தஎஸ்.கிறிஸ்டோபர் ராஜேஷ், பத்மா, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி கணபதிபுரம், அருணாச்சலா ஆர்ட்ஸ் கல்லூரி, வெள்ளிச்சந்தை பிஷப் பி.எட் கல்லூரி, முட்டம் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News