தருமபுரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் தேர்வு செய்து. சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது

Update: 2024-03-23 14:02 GMT

ஆலோசனையில் ஈடுபட்ட அதிகாரிகள்

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில்,

(Randomization) தேர்வு செய்து சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, இ.ஆ.ப. தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இன்று (23.03.2024) நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024, தொடர்பான தேர்தல் அறிவிப்பு அட்டவணையானது 16.03.2024 பிற்பகல் வெளியிடப்பட்டது. இந்நேர்வில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 நடைபெறுவதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி சுழற்சி முறையில் (Randomization) முதலாவதாக தேர்வு செய்து,

பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது. தபால் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (பொறுப்பு அலுவலர்) /தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேன்மொழி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)சையது மொஹைதீன் இப்ராஹிம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்)பிரகாசம் மற்றும் தனி வட்டாட்சியர் (தேர்தல்) அசோக்குமார் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News