விலையில்லா சைக்கிள்கள் விநியோகம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி வழங்கினார்.;
Update: 2023-12-12 14:55 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி வழங்கினார்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மொடக்குறிச்சி MLA சரஸ்வதி வழங்கினார். அரசு பள்ளிகளான லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 181 மாணவ மாணவிகளுக்கும், மொடக்குறிச்சி பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 96 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 95 மாணவிகளுக்கும் , கணபதி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 130 மாணவ மாணவிகளுக்கும் மிதிவண்டிகளை வழங்கினார்.