மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் விநியோகம்

திருவெறும்பூர் அருகே கைலாசபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

Update: 2023-12-12 12:47 GMT

திருவெறும்பூர் அருகே கைலாசபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவெறும்பூர் அருகே பெல் கைலாசபுரத்தில் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து 253 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார் .

அப்போது பேசிய அவர் ., ""சென்னையில் மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி விலையில்லா சைக்கிள்களை வழங்கி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து எனது திருவெறும்பூர் தொகுதியில் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்குவதில் பெருமை. 12 ம் வகுப்பின் முதன்மை மதிப்பெண்ணே உயர்க்கல்வியில் கல்வியைத் தொடர நல்வாய்ப்பாய் அமையும். +1, +2 வகுப்புகளின் கல்விதான் உங்களது எதிர்காலம் பிரகாசிக்கும் வாய்ப்பாகவும் அமையும். மாணவர்களுக்கு மதிப்பெண் பெறுவதோடு ஒழுக்கமும் முக்கியம். தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளி கல்வித்துறையையும், சுகாதாரதுறையையும் தான் தனது இருகண்களாக பார்க்கிறார்கள்"" - என்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சங்கரநாராயணன், பள்ளி நிர்வாக அலுவலர் ரத்தினவேலு வாழ்த்துரை வழங்கினர். அப்போது உதவி தலைமை ஆசிரியர் வீராசாமி, ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூத்தைப்பார் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா வரவேற்றார். தலைமை ஆசிரியர் மணியரசன் நன்றி கூறினார். உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News