வீடூர் அரசு பள்ளிக்கு எம்.எல்.ஏ பொருட்கள் வழங்கல்

வீடூர் அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சத்தில் மேஜை, இருக்கைகள் சிவக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-12-14 09:42 GMT
வீடூர் அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சத்தில் மேஜை, இருக்கைகள் சிவக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வீடூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அமரும் வகையில் மயிலம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.5 லட்சம் செலவில் வாங்கப்பட்ட மேஜை கள், இருக்கைகள் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதற்கு வீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பச்சைக்கண்ணு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மயிலம் சட் டமன்ற உறுப்பினர் சிவக்குமார் கலந்து கொண்டு பள்ளி நிர்வாகத் திடம் மேஜைகள், இருக்கைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அஞ்சலாட்சி மோகன், வார்டு உறுப்பினர் சுந்தரி தமிழரசன், பா.ம.க. நிர்வாகிகள் கிருஷ் ணமூர்த்தி, முத்துகிருஷ்ணன், பாபு, தேசிங்கு, தனசேகர், பாலு அய்யனார், நந்தகோபால், செல்வநாதன், தன்ராஜ் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News