பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் ஊட்டச்சத்து பானம் வழங்கல்

பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் ஊட்டச்சத்து பானம் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2024-04-30 11:00 GMT

தமிழகம் முழுவதும்  கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெயில் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் வயதானவர்கள்,

முதியவர்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் தாக்கத்தின் காரணமாக ஒரு சிலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தமிழக முழுவதும் மே,ஜூன் மாதம் முழுவதும் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் வகையில் ஓஆர்எஸ் (ORS) எனும் ஊட்டச்சத்து பானத்தை வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தியது.

Advertisement

இதன் அடிப்படையில் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட புதன் சந்தை என்ற பகுதியில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பள்ளிபாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் பிரபு குமார்,  

தம்பி பிரபாகரன், துப்புரவு மேற்பார்வையாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர். ஊட்டச்சத்து பானத்தை தினந்தோறும் 500 முதல் 600 நபர்களுக்கு வழங்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News