திருப்பூர் மாவட்டத்தில் 1.97 லட்சம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

திருப்பூர் மாவட்டத்தில் 1.97 லட்சம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் தகவல்.

Update: 2024-03-05 05:49 GMT

போலியோ சொட்டு மருந்து

திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 895 மையங்கள் மூலமாகவும், நகர்ப்புறங்களில் 259 மையங்கள் மூலமாகவும் என மொத்தம் 1154 மையங்களில்  5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள்,  ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் 26 நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும்  ரெயில் நிலையங்களில் 23 குழுக்களும் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணிக்காக சுகாதாரத்துறை, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4616 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1.98 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படடது. இதில் 1 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
Tags:    

Similar News