85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு விருப்ப மனு விநியோகம் 

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு விருப்ப மனு விநியோகிக்கும் பணியை ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.;

Update: 2024-03-21 05:45 GMT

தபால் வாக்கு விருப்ப மனு விநியோகிக்கும் பணி

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு  தமிழகத்தில் வாக்களிக்க விருப்பமுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கண்டறிந்து அவர்களுக்கு தங்களது வீடுகளுக்கு சென்று வாக்காளர் படிவத்தினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அதனடிப்படையில்  குமரி மாவட்டத்தில் வாக்களிக்க விருப்பமுள்ள மூத்த குடிமக்களுக்கு தங்கள் வீடுகளுக்கே சென்று படிவம் 12 D- கோட்டார் பகுதி வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் நேற்று தொடக்கி வைத்தார்.       இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஜி.பி.அனில் குமார், கிராம நிர்வாக அலுவலர், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News