ஆண்டு விழா போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
பள்ளிபாளையம் நகராட்சி அரசு துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா போட்டியில், பங்கேற்ற மாணவ மாணவியருக்கு, நகர மன்ற தலைவர் பரிசுகள் வழங்கினார்;
Update: 2024-02-13 10:45 GMT
பள்ளிபாளையம் நகராட்சி அரசு துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா போட்டியில், பங்கேற்ற மாணவ மாணவியருக்கு, நகர மன்ற தலைவர் பரிசுகள் வழங்கினார்
பள்ளிபாளையம் நகராட்சி ஆவரங்காடு நகராட்சி தொடக்கப் பள்ளியில் ,ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்றத் துணைத் தலைவர் ப.பாலமுருகன், தலைமை ஆசிரியர் லோகநாயகி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் நூல் செல்வம் ஆகியோர் பதக்கங்களையும், பரிசுகளையும் வழங்கினார்கள். நகர மன்ற உறுப்பினர்கள், நகர திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.