சிவகங்கையில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
சிவகங்கை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 12:50 GMT
தூய்மைபணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர சபை தலைவர் துரை ஆனந்த் தலைமை வகித்தார்.
ஆணையாளர் வெங்கட லட்சுமணன் முன்னிலை வகித்தார். இதையொட்டி நகராட்சியில் பணிபுரியும் 22 பெண்கள் உட்பட 68 தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு செட் சீருடைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் துப்புரவு அலுவலர் வெங்கடேசன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராஜபாண்டி, சண்முகநாதன், ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்