மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய ஆட்சியர் !
சிவகங்கையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் கேக் வெட்டி கொண்டாடினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 06:54 GMT
மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு தங்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சர்வதேச மகளிர் தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான மகளிர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.