மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முற்றுகை!
குஜிலியம்பாறை அருகே உள்ள காட்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 10 வது வார்டு திமுக கவுன்சிலர் அமுதா குமார் இவர்களின் மகள் பாளையம் பேரூராட்சி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-04-24 09:05 GMT
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள காட்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 10 வது வார்டு திமுக கவுன்சிலர் அமுதா குமார் இவர்களின் மகள் பாளையம் பேரூராட்சி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்ப வில்லை. இதனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் மாணவியை காணவில்லை என்று கூறி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் குஜிலியம்பாறை காவல்துறையினர் எடுக்காத காரணத்தினால் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த நகர் வடக்கு காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் முற்றுகையிட முயன்றவர்களிடம் சிறுமியை கண்டுபிடிப்பதாக கூறி வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்துச் சென்றதால் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முற்றுகை இட முயன்ற போராட்டம் கைவிடப்பட்டது.